
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல்
செய்தி முன்னோட்டம்
நேற்று, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது.
அமெரிக்க ஜனாதிபதி, டெலாவேரில் உள்ள தனது பிரச்சார தலைமையகத்திலிருந்து வெளியேறும்போது இந்த சம்பவம் நடந்தது.
பைடனின் வாகனத்திலிருந்து சுமார் 40 மீட்டர் (130 அடி) தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு SUV பாதுகாப்பு வாகனம் மீது தீடீரென ஒரு செடான் கார் மோதியது.
திடீரென கேட்ட பெருத்த சம்பத்தை தொடர்ந்து, அதிபரின் பாதுகாப்பு கமாண்டோக்கள், பைடனை உடனடியாக அங்கிருந்த காத்திருப்பு வாகனத்தில் ஏற்றி, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து,"ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி இருவரும் நலமாக உள்ளனர்" என, AFP செய்தியாளரிடம் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல்
#BREAKING : US President Joe Biden rushed into his vehicle as a car crashed into a vehicle attached to his motorcade.#JoeBiden #Biden #President #US #motorcade #crashed pic.twitter.com/WMdBolV1PW
— mishikasingh (@mishika_singh) December 18, 2023