அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கொலராடோ பிரைமரி தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவினை கொலராடோ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கூடுதலாக, முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆவார். "எழுச்சி அல்லது கிளர்ச்சியில்" அதிகாரிகள் ஈடுபட்டால், அதிகாரிகள் பதவியில் இருக்க அனுமதிக்காத அமெரிக்க அரசியலமைப்பில் அரிதாகப் பயன்படுத்தப்படும் விதியை நீதிமன்றம் பயன்படுத்தி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. டிரம்பின் பிரச்சார செய்தித்தொடர்பாளர் இந்த முடிவை "முற்றிலும் தவறானது" என்றும், இத்தீர்ப்பிற்காக மேல்முறையீடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பிற்கு என்ன அர்த்தம்?
ட்ரம்பின் தகுதி நீக்கம் என்பது, கொலராடோவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவரை வேட்பாளராகப் பட்டியலிடுவது தேர்தல் சட்டங்களின்படி தவறானதாகும். அவரது பெயரில் பதிவான வாக்குகள் எண்ணப்படாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மார்ச் 5ஆம் தேதி குடியரசுக் கட்சி நடத்தும் முதன்மைத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். எவ்வாறாயினும், அதன் முடிவு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான பொதுத் தேர்தலை பாதிக்கலாம். டிரம்ப், இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளார் . அங்கு ட்ரம்பின் கன்செர்வேடிவ் கட்சியினர், 6-3 என்ற பெரும்பான்மையுடன் உள்ளனர். இதில் மூவர், டிரம்ப் அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஜனவரி 4ஆம் தேதி வரை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.