Page Loader
லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு(IOM) சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி

எழுதியவர் Sindhuja SM
Dec 17, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு(IOM) சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து புறப்பட்ட அந்த படகு உயரமான அலைகள் காரணமாக மூழ்கி இருக்கலாம் என்று IOM இன் லிபியா அலுவலகம் தெரிவித்துள்ளது. நைஜீரியா, காம்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய சுமார் 86 புலம்பெயர்ந்தோர் அந்த படகில் இருந்ததாக தப்பி பிழைத்தோர் கூறியுள்ளனர். அந்த விபத்தில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டு லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தக்ஜக்

ஐரோப்பாவுக்கு செல்லும் அகதிகளின் கதி 

உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், IOM ஊழியர்களிடமிருந்து அவர்கள் மருத்துவ உதவியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இத்தாலி வழியாக ஐரோப்பாவை அடைய கடல் மார்க்கமாக கிளம்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவை முக்கிய புறப்படும் புள்ளிகளாக இருக்கின்றன. ஐநா அகதிகள் முகமையின் படி, துனிசியா மற்றும் லிபியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 153,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு சென்றுள்ளனர். நல்வாழ்வை தேடி ஐரோப்பாவுக்கு கிளம்பும் இப்படிப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் பொதுவாக பெரும் கூட்டங்களாக சிறிய படகுகளில் பயணிக்கிறார்கள். வசதி இல்லாத இப்படிப்பட்ட அகதிகள் செல்லும் சிறிய படகுகள் அதிகமான கனத்தை தாங்க முடியாமல் விபத்து ஏற்படுவது அப்பகுதியில் மிக சகஜமான ஒரு விஷயமாகும்.