குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடான குவைத்தின் ஆளும் எமிர், ஷேக் நவாப் அல் அகமது அல் சபா, உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 86.
தனது மூன்றாண்டு கால ஆட்சியில், எண்ணெய் வளம் கொண்ட நாட்டின் உள்நாட்டு அரசியல் மோதல்களை தீர்ப்பதில் கவனம் அவர் கவனம் செலுத்தி வந்தார்.
"மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும், நாம்- குவைத் மக்களும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள்,
உலகின் நட்பு மக்களும்- மறைந்த அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ் அவர்களுக்கு இன்று இரங்கல் தெரிவிக்கிறோம்" என எமிர் நீதிமன்றத்தின் அமைச்சர் ஷேக் முகமது அப்துல்லா அல் சபா வெளியிட்டார்.
இருப்பினும், இறப்பிற்கான காரணத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
2nd card
மன்னராகும் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர்?
மன்னர் ஷேக் நவாப் அல் அகமதின் தம்பியான ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர், 83, அடுத்த எமிரியாக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
எமிர் என்பது பல்வேறு முஸ்லீம் (முக்கியமாக அரபு) ஆட்சியாளர்களின் பட்டம்.
கடந்த நவம்பர் மாதம் நவாப் அல் அகமதி, குறிப்பிடப்படாத நோய்க்காக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது முதல், அவரின் உடல்நிலை குறித்து மக்கள் மத்தியில் கவலைகள் எழுந்தது.
ஷேக் நவாப் எமிராக பதவியேற்பதற்கு முன் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
1752ல் அல் சபா குவைத்தை ஆட்சி செய்ததில் இருந்து, ஷேக் நவாஃப் எந்த ஒரு அமீரின் மூன்றாவது குறுகிய பதவிக் காலத்தைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.