Page Loader
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பலத்த பாதுகாப்புடன் கராச்சி மருத்துவமனையில் அனுமதி

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2023
09:26 am

செய்தி முன்னோட்டம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத் இப்ராஹிம் விஷம் வைத்து கொல்லப்பட சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின. எனினும், அதை அவரது உதவியாளர் உறுதிப்படுத்தவில்லை என இந்தியா டுடே தெரிவிக்கிறது. தாவூத் இப்ராகிம், இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த மருத்துவமனையில், அந்த தளத்தில் உள்ள ஒரே நோயாளி அவர் மட்டும் தான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரை சந்திக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த மாடிக்கு செல்ல அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

card 2

துபாயிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த தாவூத்

இந்த சூழலில், தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை பெற இந்தியாவில் உள்ள அவரின் உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் மும்பை போலீசார் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஜனவரியில், தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன், தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA), தாவூத் இப்ராஹிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு கராச்சியில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். என்ஐஏ, தாவூத் இப்ராஹிமுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், அவரும் அவரது உயர்மட்ட உதவியாளர்களும் தான் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை கட்டுப்படுத்துவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் முக்கிய குற்றவாளியாக தேடப்படுபவர் தாவூத் இப்ராஹிம்.