
காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது
செய்தி முன்னோட்டம்
நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடைக்கிய வரைவு தீர்மானம் ஒன்று, நேற்று (டிசம்பர் 12) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இந்த உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு அல்ஜீரியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் உட்பட பல நாடுகளால் ஆதரவு தெரிவித்தன.
எனினும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பத்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இது மட்டுமின்றி 23 உலக நாடுகள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
card 2
ஹமாஸ் பற்றி குறிப்பிடாமல் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம்
தாக்கல் செய்யப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் ஹமாஸைக் குறிப்பிடவில்லை, என இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா தெரிவித்து, இந்த வரைவில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தது.
"பொதுச் சபையில் இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானம், பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது".
"இந்த அசாதாரணமான கடினமான நேரத்தில், சரியான சமநிலையை அடைவதே சவாலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 99 வது பிரிவை செயல்படுத்துவதன் மூலம், தற்போது பிராந்தியம் எதிர்கொள்ளும் பல சவால்களை எதிர்கொள்ள ஒரு பொதுவான தளத்தை கண்டுபிடிக்க முடிந்தது" என ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறினார்.
card 3
அக்டோபரில் நடைபெற்ற தீர்மானத்தில் வாக்களிப்பதை தவிர்த்த இந்தியா
இதே போன்றதொரு தீர்மானம், கடந்த அக்டோபரில், ஐநா முன்மொழிந்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அந்த தீர்மானத்தை அப்போது இந்தியா புறக்கணித்தது.
வாக்களிக்காத போதிலும், காசா பகுதியில் தடையின்றி மனிதாபிமான அணுகலுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதேபோன்ற தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்த சில நாட்களுக்குப் பிறகு, நேற்று ஐநா பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் சமர்ப்பிக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில், 90 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், 13 சாதகமான வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை.