"இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு, இந்தியாவோ அமெரிக்காவோ காரணமில்லை, பாகிஸ்தான் தான் காரணம் என, சக்தி வாய்ந்த ராணுவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
1993, 1999 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு, நான்காவது முறையாக பிரதமர் பதவிக்கு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் நவாஸ் ஷெரீப் தற்போது போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பிப்ரவரி மாதம் தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட தன் கட்சி சார்பில் விருப்பம் தெரிவித்தவர்களிடம் இடம் ஷெரீப் கலந்துரையாடினார்.
2nd card
நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த ஷெரீப்
அப்போது பேசியவர், "இன்று பாகிஸ்தான் அடைந்துள்ள நிலைக்கு (பொருளாதாரத்தை குறிப்பிட்டு) இதை இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது ஆப்கானிஸ்தானோ செய்யவில்லை.
உண்மையில், நாம் நம் காலில் நம்மை நாமே சுட்டுக் கொண்டோம். அவர்கள் (ராணுவத்தை குறிப்பிட்டு) 2018 தேர்தல்களில் மோசடி செய்து, மக்களின் துன்பங்களுக்கும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்த அரசாங்கத்தை இந்த தேசத்தின் திணித்தனர்" என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ஷெரீப், அந்நாட்டின் நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
"ராணுவ ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகள் மாலையிடுகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை உடைக்கும் போது நீதிபதிகள் அதை அங்கீகரிக்கிறார்கள்.
பிரதமர் என்று வரும்போது அவரை நீக்கும் நீதிபதிகள், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அங்கீகாரத்தையும் ஏன் அவர்கள் வழங்குகிறார்கள்" என நீதிபதிகளை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.
3rd card
நான்காவது முறையாக பிரதமராக முயற்சிக்கும் ஷெரீப்
கடந்த நான்கு வருடங்களாக வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஷெரீப், இந்த ஆண்டு அக்டோபரில் நாடு திரும்பினார்.
ராணுவத்தால் ஆட்சிகள் கலைக்கப்படுவதற்கு பெயர்போன பாகிஸ்தானில், இவர் நான்காவது முறையாக பிரதமராக முயற்சிக்கிறார்.
நாட்டின் ராணுவம், தேர்தல் ஆணையம் ஷெரீப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில்,
ஷெரீப் அந்த குற்றச்சாட்டுகளை தற்போது எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(PTI) மேல் வைத்துள்ளார்.
"1999ல் நான் காலையில் பிரதமராக இருந்தேன், மாலையில் நான் கடத்தல்காரனாக அறிவிக்கப்பட்டேன். அதேபோன்று 2017ல் எனது மகனிடம் சம்பளம் வாங்காததால் நான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்" என்றார்.
"தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என ராணுவம் இந்த முடிவை எடுத்ததாக ராணுவத்தை விமர்சித்தார்.