உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

23 Nov 2023

லெபனான்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்று இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஷியா இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர் 

திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

23 Nov 2023

இஸ்ரேல்

வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்

காசாவில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை வரை தாமதமாகியுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

23 Nov 2023

சீனா

சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 

காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்

தன்னுடைய எக்ஸ் தளத்தின் மூலமாக பெறப்படும் வருமானத்தை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ரெட் கிராஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க போவதாக எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

21 Nov 2023

இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்

26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது

தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத செயல்கள் தொடர்பான காட்சிகள் தற்போது பரவி வருகிறது.

சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா

தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

20 Nov 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்

வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 Nov 2023

கடத்தல்

செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 

செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்

90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.

20 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

19 Nov 2023

இஸ்ரேல்

'5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 

50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.

யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை

யூத எதிர்ப்பு குறித்த கருத்துக்களை எலான் மஸ்க் ஆதரித்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ்.

இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், சில தசாப்தங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை எனவும், போரை தூண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையேயான நேற்றைய 'ஆக்கபூர்வமான' சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி எனக் கூறியுள்ளார்.

நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்

காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார்.

சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார்

பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு, அமெரிக்காவில் நடந்த ஒரு விழாவில் அமைதியை சீர்குளித்ததற்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன் 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்க இருக்கும் 30வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ​​'சீனாவுக்கு உண்மையான பிரச்சனைகள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

15 Nov 2023

உலகம்

பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு 

ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்து வருவதால், அங்குள்ள மக்கள் பூச்சி கொல்லியை வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டி 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்

ரஷ்ய-உக்ரைன் போரின் போது, உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான், கடந்த ஆண்டு இரண்டு தனியார் யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுஎஸ்) நிறுவனங்களுடனான ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து குறைந்தது 364 மில்லியன் டாலர்களைப் பெற்றதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

15 Nov 2023

காசா

காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு

காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.

15 Nov 2023

ஹமாஸ்

அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.

14 Nov 2023

கனடா

கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்

கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

14 Nov 2023

காசா

மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம் 

பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

14 Nov 2023

இலங்கை

இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று பிற்பகல் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம் 

9 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெறிமுறை நடத்தையை நிர்வகிக்கும் நெறிமுறைக் குறியீட்டு விதிகளை திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

14 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியும், அந்த அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அசாரியின் நெருங்கிய கூட்டாளியுமான மௌலானா ரஹீம் உல்லா தாரிக், பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

14 Nov 2023

காசா

16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

காசாவை கடந்த 16 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஹமாஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார்.

13 Nov 2023

இந்தியா

பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா

சீனாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சிகளை இணைந்து தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் சீனாவின் போர்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம் 

உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்,வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் 

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தனது மூத்த அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மனை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்

செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.