
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அரசாங்க வட்டாரங்களிடம் இந்த தகவலை பெற்றதாக பைனான்சியல் டைம்ஸ் (FT) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கொலை முயற்சியில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், இது குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.
இதுவரை, இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
பிண்டமேவ்ஜ்கள்
யாரிந்த குர்பத்வந்த் சிங் பன்னூன்?
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கனேடிய அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டி இருந்த நிலையில், தற்போது இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனராவார். அவர் ஒரு அமெரிக்க மற்றும் கனேடிய குடிமகன் ஆவார்.
இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கு என்று ஒரு தனிநாடு பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி பயங்கரவாத செயலகளில் ஈடுபடும் அமைப்புங்களில் சீக்கியர்களுக்கான நீதி(SFJ) அமைப்பும் ஒன்றாகும்.
இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றனர்.