'5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
டஜலகவா
'அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை': பெஞ்சமின் நெதன்யாகு
இந்நிலையில், நேற்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் விவாகரம் குறித்து இரு தரப்பினருடனும் கத்தார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சு வார்த்தையின் முடிவில் 5 நாள் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.
அந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாளைக்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிக்கும் என்று அந்த செய்தியில் கூற பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இப்போதைக்கு அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை. அனைத்து பணயக்கைதிகளையும் நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.