ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையேயான நேற்றைய 'ஆக்கபூர்வமான' சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி எனக் கூறியுள்ளார்.
இரு உலகத் தலைவர்களும் சட்டவிரோத ஃபெண்டானிலை(போதை பொருள்) எதிர்த்துப் போரிடுவதன் மூலமும், இராணுவத் தொடர்புகளை மீண்டும் நிறுவுவதன் மூலமும் உறவுகளை புதுப்பித்துக் கொள்ள உறுதி அளித்தனர்.
இந்த சந்திப்பின் முக்கிய முன்னேற்றமாக, பைடன் மற்றும் ஜி பரஸ்பரம் தொலைபேசியில் அழைத்து பேசிக்கொள்ள ஒப்புக்கொண்டதாக, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பைடன் தெரிவித்தார்.
இருதரப்பு உறவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, "நாங்கள் நடத்திய மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்கள் அவை என்று நான் நம்புகிறேன்" என அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
2nd card
ஆழமான கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சீனா கருத்து
இந்த சந்திப்பு குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆழமான மற்றும் நேர்மையான கருத்துப் பரிமாற்றம்" நடைபெற்றதாக தெரிவித்திருந்தது.
மேலும் அந்த அறிக்கை, ஒரு நாட்டின் வெற்றி மற்றொரு நாட்டின் வாய்ப்பு எனவும், தைவான் பதற்றம், அமெரிக்கா-சீனா "உறவில் முக்கியமான பிரச்சினை" எனவும் கூறியது.
இரு நாடுகளும் ராணுவ தொடர்பை மீண்டும் நிறுவுவதன் மூலமும், ஜி இடம் நேரடியாக பேசுவதின் மூலமும், இரு நாடுகளுக்குள்ளும் தவறான புரிதல்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என பைடன் தெரிவித்தார்.
3rd card
ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்ற பைடன்
இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களுக்கு பின் பத்திரிகையாளர் சந்திப்பில், பைடனிடம், ஜி ஜின்பிங்கை இன்னும் சர்வாதிகாரி என கூறுவீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பைடன், "அவர் ஒரு சர்வாதிகாரி, அவர் ஒரு கம்யூனிச நாட்டை நடத்துபவர், சீன அரசாங்கம் நம்மை விட வித்தியாசமானது" என தெரிவித்தார்.
பைடன் மற்றும் ஜி, ஆகியோர் அமெரிக்காவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.