
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்
செய்தி முன்னோட்டம்
90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.
கோலாகலமாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், மிஸ் தாய்லாந்து மற்றும் மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் நிகரகுவாவிற்கு அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.
பிரபஞ்ச அழகி 2022, ஆர்'போனி கேப்ரியல் இடம் இருந்து, பிரபஞ்ச அழகி 2023 ஷெய்னிஸ் பலாசியோஸ்-இடம் கிரீடம் மாறிய காட்சி போட்டியாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
பிரபஞ்ச அழகி போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில், மிஸ் நிகரகுவாவிற்கு ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தையும், ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
2nd card
வெற்றியாளரை முடிவு செய்த இறுதி கேள்வி
பிரபஞ்ச அழகியை தேர்வு செய்யும் கடைசி கேள்வியாக, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் தாய்லாந்து மற்றும் மிஸ் நிகரகுவா இடம்,
"நீங்கள் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு வருடம் வாழ முடிந்தால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் மற்றும் ஏன்?" என கேட்கப்பட்டது.
மிஸ் ஆஸ்திரேலியா, தன் தாயை கூறினார். மிஸ் தாய்லாந்து, பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்யை கூறினார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், பெண்ணியத்தின் தாய் என்று அழைக்கப்படும் மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் வாழ்க்கையில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்க விரும்புவதாக, மிஸ் நிகரகுவா கூறியது, அவரது வெற்றிக்கு வழி வகுத்தது.
ட்விட்டர் அஞ்சல்
இறுதிக் கேள்விக்கு மிஸ் நிகரகுவாவின் பதில்
Well done Nicaragua! @Sheynnispalacios_of#72ndMISSUNIVERSE #MissUniverse2023 @TheRokuChannel pic.twitter.com/wMgOLM84Px
— Miss Universe (@MissUniverse) November 19, 2023