Page Loader
16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
காசா நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் கொடியுடன் நிற்கும், இஸ்ரேல் படைகள்.

16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

எழுதியவர் Srinath r
Nov 14, 2023
10:46 am

செய்தி முன்னோட்டம்

காசாவை கடந்த 16 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஹமாஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார். "காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்தது. தீவிரவாதிகள் தெற்கு நோக்கி ஓடுகின்றனர். சாமானிய மக்கள், ஹமாஸ் தளங்களை சூறையாடுகின்றனர்" "காசா மக்களுக்கு அவர்கள் அரசின் மீது நம்பிக்கை இல்லை" என யோவ் கேலன்ட் இஸ்ரேலின் முக்கிய தொலைக்காட்சி நிலையங்களில் ஒளிபரப்பான வீடியோவில் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மூண்டது. இப்போரில் இதுவரை, 11,240 பாலஸ்தீனர்களும், 1,400 இஸ்ரேலிகளும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 240 நபர்களை ஹமாஸ் பயணக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

ட்விட்டர் அஞ்சல்

காசா நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் வீரர்கள்