பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தனது மூத்த அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மனை பதவி நீக்கம் செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன ஆதரவு ஊர்வலத்தை காவல்துறையினர் கையாண்டது குறித்து பிரேவர்மேன் கடந்த வாரம் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அனுமதி இல்லாமல், பாலஸ்தீன ஆதரவு ஊர்வலத்தை காவல்துறையினர் கையாண்டது குறித்து பிரேவர்மேன் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்த கட்டுரையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பாரபட்சம் காட்டுவதாகவும், பாலஸ்தீனிய சார்பு கும்பல்களை காவல்துறையினர் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும் பிரேவர்மேன் கூறி இருந்தார்.
பாலஸ்தீனிய சார்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துக்கள்
காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்கள் வெறுப்பு எண்ணங்களை கொண்டவர்கள் என்றும், அப்படிப்பட்ட போராட்டக்காரர்களான "பாலஸ்தீனிய சார்பு கும்பல்கள்" சட்டத்தை மீறுவதை லண்டன் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் சுயெல்லா பிரேவர்மேன் கூறி இருந்தார். பிரேவர்மேனின் இந்த கருத்துக்களுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டன் தெருக்களில் இறங்கி சுயெல்லா பிரேவர்மேனுக்கு எதிராக போராட தொடங்கினர். பிரேவர்மேனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்துள்ளார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.