அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதியுதவி பெற்று இயங்கும் பெரும்பான்மையான அரசுத் துறைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டிற்கு முன் நிதி விடுவிக்கப்படாத போது முடங்குகிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, அமெரிக்க அரசு முடங்குவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், தற்காலிக நிதி மசோதாவிற்கு எதிர்க்கட்சியினரான குடியரசு கட்சியினர் ஒப்புக்கொண்ட நிலையில் அரசு முடங்குவது தவிர்க்கப்பட்டது. தற்காலிக மசோதா வரும் 17 ஆம் தேதி வரை, அமெரிக்க அரசுக்கு நிதியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் முன்மொழிந்துள்ள நிதி மசோதா
நவம்பர் 17 ஆம் தேதிக்கு பின் அமெரிக்க அரசு முடங்குவதை தடுக்க, இரண்டு-படி முன்மொழிவை சபாநாயகர் மைக் ஜான்சன் முன்மொழிந்துள்ளார். அதன்படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான திட்டங்கள், போக்குவரத்து, விவசாயம், வீடுகள் உள்ளிட்ட துறைகளுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை நிதி அளிக்கும் வண்ணமும், ராணுவம் உட்பட அரசின் பிற நடவடிக்கைகளுக்கு, பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வரை நிதி அளிக்கவும் முன்மொழிப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளில், இஸ்ரேல், உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் தெற்கு எல்லைகளுக்கான நிதி விடுவிப்பு குறித்த அறிவிப்புகள் இல்லை. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பழமைவாதிகள் கோரிய செலவினங்களும் குறைக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், 17ஆம் தேதிக்குள் நிதி மசோதா நிறைவேற்றப்பட முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் அடிக்கடி முடங்கும் அபாயம் ஏற்படுவது ஏன்?
அமெரிக்காவில் ஆளும் கட்சியினர் முன்மொழியும் செலவினங்களில், குறைந்தது 30% ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே நிதி மசோதா நிறைவேறும். முன்னதாக, அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், உக்கரையனுக்கு நிதி உதவி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்ததற்கு எதிர்க்கட்சியனரான குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, நிதி மசோதா நிறைவேறாததால் அமெரிக்க அரசு முடங்கம் அபாயம் ஏற்பட்டது. பின்னர், உக்கரனுக்கு அறிவிக்கப்பட்ட உதவிகள் நீக்கப்பட்ட பின்னர், இடைக்கால நிதி மசோதா நிறைவேறியது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு சபைகளில், செனட் சபையில் ஜனநாயக கட்சியும், பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினரும் பெரும்பான்மை பெற்றுள்ளனர். இதனால், பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட, ஜனநாயக கட்சியினருக்கு, குடியரசு கட்சியினரின் உதவி தேவை.
அமெரிக்க கடன் மதிப்பீடு சரியும் அபாயம்
அமெரிக்க பிரதிநிதி சபையில் ஆளும் ஜனநாயக கட்சியினருக்கு பெரும்பான்மை இல்லாததால், குடியரசு கட்சியினரின் கோரிக்கைக்கு ஏற்ப நிதி மசோதாக்களில் இடம்பெற்றுள்ள செலவினங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அதிபர் ஜோ பைடன் அறிவித்த பெரும்பான்மையான திட்டங்களை, செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு அடிக்கடி முடங்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவதால், அதன் கடன் வாங்கும் மதிப்பீடு சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அரசு செயல் இழக்கும் போது பத்திர முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், நாடுகளுக்கு கடன் மதிப்பீட்டை வழங்கும் மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், அமெரிக்காவிற்கான கடன் மதிப்பீட்டை குறைக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கடன் மதிப்பீடு சரியும்போது, அது கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.