செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?
செய்தி முன்னோட்டம்
செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் பின்னணியில், ஈரானின் ஆதரவு பெற்ற, ஏமன் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் ஹூதிக்கள் கடத்தியுள்ளனர் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தை "ஈரானிய பயங்கரவாதச் செயல்" எனக் கூறியது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மற்றொரு ஈரானிய பயங்கரவாதச் செயலாகும். இது சுதந்திர உலகின் குடிமக்களுக்கு எதிரான ஈரானின் போர்க்குணத்தை பிரதிபலிக்கிறது" என குற்றம் சுமத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஹூதிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் அவர்கள் கப்பலை கடத்தியத்தை ஒப்புக்கொண்டது மட்டுமின்றி, அதில் இருந்தவர்களை "இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் மதிப்புகளின்படி" நடத்துவதாகவும் கூறினர்.
card 2
ஏமனின் ஹூதி போராளிகள் யார்?
தெஹ்ரானுடன் நட்பு கொண்டாடும் ஹூதிகள், காசா பகுதியில் போரிடும் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அதரவாக, இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அவர்களின் ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தோல்வியடைந்தன. அதனால் தற்போது கப்பல் கடத்தலில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
1990 களின் பிற்பகுதியில், ஹூதி இயக்கம் தொடங்கியது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழு, ஒரு காலத்தில் ஏமனை ஆண்ட ஷியா இஸ்லாத்தின் ஜெய்டி பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.
card 3
ஹமாஸிற்கு ஆதரவு கரம் நீட்டும் ஹூதி
ஜெய்டி பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டபோதிலும், காலப்போக்கில் தங்கள் செல்வத்தை இழந்து வறுமையினால் ஓரங்கட்டப்பட்டார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஹூதிகள், ஏமன் அரசாங்கத்துடன் பலமுறை மோதினர்.
மேலும் இது நீண்டகாலமாக தொடர்ந்துவரும் மோதல் எனவும் கூறப்படுகிறது.
தற்சமயம், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த கிளர்ச்சிக் குழு, பாலஸ்தீனத்துடன் நட்பு பாராட்டி, இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.
card 4
இந்தியா செல்லும் சரக்கு கப்பலை ஹவுதிகள் கடத்தியது ஏன்?
இந்தியாவுக்குச் செல்லும் சரக்குக் கப்பல் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் ஜப்பானியர்களால் இயக்கப்படுகிறது.
ஆனால் ஹூதிகள், அந்தக் கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்று கூறுகின்றனர்.
கடத்தப்பட்ட இந்த சரக்கு கப்பல் இப்போது ஏமன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செய்திகளின் படி, கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை. அதிலுள்ள 25 பணியாளர்களும், உக்ரைன், பல்கேரியன், பிலிப்பினோ மற்றும் மெக்சிகன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இஸ்ரேலுடனான தொடர்பு காரணமாக கப்பலை கடத்தியதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
card 5
ஹெலிகாப்டரில் பறந்து வந்து நடந்தேறிய கடத்தல் சம்பவம்
இந்த சம்பவம் பற்றி விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில், "உள்ளூர் நேரப்படி, மதியம் 1-மணியளவில், ஒரு ஹெலிகாப்டர், ஜப்பானியர்களுக்குச் சொந்தமான கேலக்ஸி லீடர் கப்பலின் மேல் பறந்து வந்தது. அதனுள்ளிருந்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், கப்பல் தளத்திற்குச் சென்றனர். அதன் பின்னர் மாலுமிகளை மிரட்டி, கப்பலை கடத்தியுள்ளனர்" எனத்தெரிவித்தார்கள்.
நவம்பர் 16 அன்று, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கட்டுமான குழு, பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக யேமன் மற்றும் ஜிபூட்டிக்கு இடையே உள்ள பாப் எல்-மண்டேப் வழியிலும், செங்கடலில் உள்ள வழித்தடங்களில் பயணிக்கும் அனைத்து கடற்படையினருக்கும், ஹூதிகளின் பெயரை குறிப்பிடாமல் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.
அதன்படி, ஏமன் கடற்பரப்பிலிருந்து கப்பல்கள் முடிந்தவரை தொலைவில் இருக்குமாறும், முடிந்தவரை இரவில் பயணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.