Page Loader
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தெற்காசியாவில் சமீப காலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது கொடுத்தது.

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுதியவர் Srinath r
Nov 15, 2023
12:13 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டி 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 5:36 மணிக்கு, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, அட்சரேகை 35.96 மற்றும் தீர்க்கரேகை 71.58, பகுதியில் பதிவானது. இது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை என உணர்த்துகிறது.மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் 18 கிலோமீட்டராக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்படுத்திய உடனடி உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. நேற்று, இலங்கையின் கொழும்புக்கு தென்கிழக்கே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்