பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்து வருவதால், அங்குள்ள மக்கள் பூச்சி கொல்லியை வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சிகள் அதிகமாக காணப்பட்டன. பாரிஸ் நகரத்தில் உள்ள ஹோட்டல்கள், வாடகை குடியிருப்புகள், திரையரங்கள், அதிவிரைவு ரயில்கள் போன்ற முக்கிய இடங்கள் முழுவதும் மூட்டை பூச்சிகளால் சூழப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது மூட்டைப்பூச்சி பாதிப்பு ஹாங்காங்கிலும் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம், ஹாங்காங் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூட்டைப்பூச்சிகள் காணப்படும் புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகப் பரவியது.
ஆனால், அதன் பிறகு ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த துப்புரவு பணிகளுக்கு பிறகு மூட்டைப்பூச்சிகள் எதுவும் காணப்படவில்லை.
சிக்னயூல்
பூச்சி கொல்லியை வாங்கி குவிக்கும் மக்கள்
எனினும், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொந்தரவு அதிகரிக்க போவதாக நம்பிய ஹாங்காங் வாசிகள் பீதியடைய தொடங்கினர்.
இதனால், பூச்சிக் கொல்லி விற்பனை சூடுபிடித்துள்ளது.
அதிக பூச்சி கொல்லிகள் விற்கப்படுவதால், நம்பமுடியாத அளவு வேலை பழு அதிகரித்துள்ளதாகவும், ஒரு மாத வேலையை 3 நாட்களில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான 'நோபெட்பக்ஸ்-HK' வின் உரிமையாளர் பிரான்சிஸ்கோ பசோஸ் தெரிவித்துள்ளார்.
பூச்சி கட்டுப்பாடு மற்றும் பூச்சிகளைக் கொல்லும் பொருட்களின் விற்பனை 172 மடங்கு அதிகரித்துள்ளதாக ஈ-காமர்ஸ் தளமான ஷாப்லைன் கூறியுள்ளது.
மூட்டைப்பூச்சிகளால் நோய்கள் எதுவும் பரவாது என்றாலும், அவை கடித்தால் அலர்ஜி மற்றும் அரிப்பு ஏற்பட்டு மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.