எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
தன்னுடைய எக்ஸ் தளத்தின் மூலமாக பெறப்படும் வருமானத்தை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ரெட் கிராஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க போவதாக எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தக்குதலில் தொடங்கிய யுத்தத்தால், தற்போது பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காசாவை மையமாக வைத்து நடைபெறும் இந்த போரில், பல மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்ததை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் அறைகூவல் விடுத்தன.
உலக நாடுகளின் பிரதிநிதியாக பலரும், இரு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
card 2
போரினால் பலியான பல உயிர்கள்
2 மாதத்திற்கும் மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், இந்த போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக தன்னுடைய எக்ஸ் நிறுவனத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கும், இந்த ரெட் கிராஸ் தொண்டு நிறுவனத்திற்கும் வழங்கப்போவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
இதே நேரத்தில், இஸ்ரேலும், ஹமாஸும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளது.
அதற்கு பதிலாக ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள பெண்களையும், குழந்தைகளையும் விடுவிப்பது என்றும், இஸ்ரேலும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.