உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மீதான தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியது.

13 Nov 2023

காசா

அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.

13 Nov 2023

ஹமாஸ்

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்

காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார்.

12 Nov 2023

கனடா

'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ 

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக மீண்டும் தனது குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

12 Nov 2023

ஈரான்

'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர் 

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாகவும் இஸ்ரேலுக்கு உடந்தையாகவும் இருப்பது அமெரிக்கா தான் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) தெரிவித்துள்ளார்.

11 Nov 2023

உலகம்

14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 

ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சிறு/நடுத்தர பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஐஸ்லாந்து இன்று 'அவசரகால நிலையை' அறிவித்தது.

பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் 

காசா பகுதி மீது குண்டு வீசுவதையும், அங்கு வாழும் பொதுமக்களைக் கொல்வதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல் 

காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார்.

லேமினேஷன் பேப்பர் தீர்ந்துவிட்டதால் புதிய பாஸ்போர்ட்டுகளுக்காக காத்திருக்கும் பாகிஸ்தானியர்கள

புதிய பாஸ்போர்ட்டுகளை பெறுவதில் பாகிஸ்தானிய குடிமக்கள் ஒரு வினோதமான தடையை எதிர்கொண்டு வருகின்றனர் -- லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறை.

காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா

ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 Nov 2023

இஸ்ரேல்

கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல்

ஊழல் விசாரணைக்கு மத்தியில் நாட்டின் பிரதமர் பதவி விலகிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சௌசா அழைப்பு விடுத்துள்ளார்.

உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி அக்ரம் கான் காஜி சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 Nov 2023

காசா

காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு

வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்

லட்சக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிரான, தாலிபான் விமர்சனத்திற்கு பதில் அளித்து, இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் ஆதரித்துள்ளார்.

09 Nov 2023

இஸ்ரேல்

 காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி

இஸ்ரேல் மீது அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர்.

09 Nov 2023

இஸ்ரேல்

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்

இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

"அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் "அழிவுகரமான" கொள்கைகளால் அணு ஆயுதம், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தியோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

100 லட்சம்  ஆஸ்திரேலியர்கள் இணையம், தொலைபேசி சேவைகள் இல்லாமல் தவிப்பு: காரணம் என்ன?

இன்று 100 லட்சத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

08 Nov 2023

இஸ்ரேல்

காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர்

ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் அதிக வருவாயில்லை எனக் கூறும் நிலையில், 70 வயதான ஊபர் பயணிகள் கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் ஊபர் ரைடுகள் மூலமாக ரூ.23 லட்சம் வருவாய் ஈட்டியிருக்கிறார்.

07 Nov 2023

நேபாளம்

நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நேபாளத்தில் நேற்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

07 Nov 2023

காசா

காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.

07 Nov 2023

இஸ்ரேல்

ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.

07 Nov 2023

ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள் 

நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

06 Nov 2023

இஸ்ரேல்

தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்  

காசா பகுதியில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

05 Nov 2023

இஸ்ரேல்

சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் மேற்குக் கரைக்கு இன்று உயர் பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.

05 Nov 2023

கனடா

நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் 

சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனரான பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

04 Nov 2023

நேபாளம்

நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

04 Nov 2023

காசா

காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

முற்றுகையிடப்பட்ட வடக்கு காசாவிலிருந்து காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மியான்வாலி விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது; 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்

வெள்ளிக்கிழமை இரவு, வடக்கு பாகிஸ்தானின் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம், தற்கொலை படையினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

04 Nov 2023

நேபாளம்

நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 140 பேர் படுகாயம்

வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 128 நபர்கள் உயிரிழந்தனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

03 Nov 2023

ஹமாஸ்

காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்

மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐநா அலுவலகம், காசா, மேற்கு கரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் என கூறியுள்ளது.

03 Nov 2023

எகிப்து

எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் சிலையின் உருவாக்கத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

எகிப்தில் அமைந்திருக்கும் ஸ்பிங்ஸ் சிலை (Sphinx Statue) எப்படி உருவாகியிருக்கலாம் எனத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரத்தில், காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த சமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா

அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.