NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம்
    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல், பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் அதிகரித்துள்ளது. படம்- ராய்ட்டர்ஸ்

    வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம்

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரத்தில், காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த சமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும் இந்த தாக்குதலில் 21 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

    போண்டா பஜாரில் டேங்க் அடா பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்புக்கு பின், அருகில் உள்ள மருத்துவமனையில் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்ட தகவலின் படி, வெடிகுண்டு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்புக்கு பின்னர் துப்பாக்கி சத்தமும் கேட்டது என அதிகாரிகள் கூறியதாக சமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    2nd card

    பாகிஸ்தானில் தொடரும் குண்டு வெடிப்புகள்

    பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், மசூதிக்கு அருகில் குண்டு வெடித்தது.

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும்,கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் மசூதிக்கு அருகில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருந்தனர்.

    செப்டம்பர் மாத தொடக்கத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த வெடி விபத்தில் ஒரு முக்கிய முஸ்லிம் தலைவர் உட்பட குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பாகிஸ்தான்

    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு ஆசிய கோப்பை
    INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா? ஆசிய கோப்பை
    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! ஆசிய கோப்பை
    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025