சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மீதான தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயுத சேமிப்பு கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மையம். தகர்க்கப்பட்டது "இரண்டு மணி நேரத்தில் அமெரிக்க படைகள் சிரியாவில் இரண்டு இடங்களில் துள்ளிய தாக்குதல் நடத்தின" என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போர் தொடங்கியதற்கு பின்னர், ஈராக் மற்றும் சிரியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், டஜன் கணக்கான அமெரிக்க படை வீரர்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதை தடுக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கை மட்டும் இன்றி, மத்திய கிழக்கில் போர் விரிவடைவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஈரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைப்புகள், இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் இணைவதை தடுக்க முடியும் என அமெரிக்க ராணுவம் நம்புகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு 10 நாட்களுக்குப் பிறகு, சிரியா மற்றும் ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படையில் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா முதல்முறையாக பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கும், இஸ்ரேல்-பாலஸ்தீன போர்க்கும் தொடர்பில்லை என அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தது.