தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
காசா பகுதியில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், காசா பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் "காசா நகரைச் சுற்றி வளைத்துள்ளன... இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்ற இரு பகுதிகள் உள்ளன" என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
நேற்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஈராக் மற்றும் சைப்ரஸ் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
காசா புகுதியில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவியை அதிகரிப்பது மற்றும் ஈராக் போன்ற நாடுகள் இந்த மோதலில் கலந்து கொள்ளாமல் இருப்பதை தடுப்பது ஆகியவை அவரது இந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
போஜ்க்
குறைந்தது 9,770பாலஸ்தீனியர்கள் பலி
நேற்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது பயணத்தை முடித்து கொண்ட நிலையில், அதனை தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியை இரண்டாக பிரித்துள்ளதாக கூறியுள்ளது.
ஆண்டனி பிளிங்கனின் இந்த பயணத்தின் போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு சென்றிருந்த அவர், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்தார்.
இஸ்ரேல் போர் தொடங்கியதற்கு பிறகு, ஒரு அமெரிக்க உயர்மட்ட அதிகாரி மேற்கு கரைக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
இதற்கிடையில், பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், காசா பகுதியில் நடந்துவரும் "இனப்படுகொலைக்கு" கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசா பகுதி மீது இஸ்ரேல் 4 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் குறைந்தது 9,770 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் பெருமபாலானோர் பொதுமக்கள் ஆவர்.