நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல்
ஊழல் விசாரணைக்கு மத்தியில் நாட்டின் பிரதமர் பதவி விலகிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சௌசா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், டி சௌசா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவித்தார். "குடியரசின் சபையை கலைத்துவிட்டு அடுத்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்தலை நடத்த நான் முடிவு செய்துள்ளேன்" என டி சௌசா தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு தெரிவித்தார். போர்ச்சுகல் பிரதமரின் தலைமை பணியாளர் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபதற்காக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, போர்ச்சுகல் சோசலிச பிரதமர் அன்டோனியோ கோஸ்டா கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.