ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
லட்சக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிரான, தாலிபான் விமர்சனத்திற்கு பதில் அளித்து, இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் ஆதரித்துள்ளார்.
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானியர்கள் வெளியேற, அக்டோபர் 31ம் தேதி வரை அந்நாட்டு அரசு அவகாசம் வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 25 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர்.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
தாலிபான்களின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் பதிலளித்தார்.
காபுல் நகரத்திலிருந்து இயங்கும் பாகிஸ்தானி ஆயுத குழுக்களை, தாலிபான்கள் கட்டுப்படுத்த தவறியதே, பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
2nd card
ஆப்கானியர்களால் பாகிஸ்தானில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசியவர், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும்பான்மையான குற்றங்களில், ஆப்கானிகளுக்கு தொடர்புள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுப்பாட்டில் எடுத்தது முதல், பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் 60% அதிகரித்துள்ளதாகவும், இச்சம்பவங்களில் 2,000 உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாலிபான்கள் பாகிஸ்தானின் இந்த 'ஒரு தலைப்பட்சமான' நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான், அந்நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை, தாலிபன்கள் தீர்க்காததே இந்த நடவடிக்கைக்கு காரணமான தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னர், பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஆப்கானிகள் அகதிகளாக இருந்தனர். இதில் 17 லட்சம் பேர் ஆவணம் அற்ற அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.