Page Loader
14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 
அந்த பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 

எழுதியவர் Sindhuja SM
Nov 11, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சிறு/நடுத்தர பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஐஸ்லாந்து இன்று 'அவசரகால நிலையை' அறிவித்தது. இந்த நில அதிர்வுகளால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று ஐஸ்லாந்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளனர். "தேசிய காவல்துறைத் தலைவர் ... கிரிண்டாவிக்க்கு வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக சிவில் பாதுகாப்புக்கான அவசர நிலையைப் பிரகடனம் செய்கிறார்" என்று ஐஸ்லாந்தின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. "நிலநடுக்கங்கள் ஏற்கனவே ஏற்பட்டதை விட பெரியதாக ஏற்படலாம். இந்த தொடர் நிகழ்வுகள் எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கும்" என்று நிர்வாகம் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

ட்ஜகிவ்

அக்டோபர்  மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்புகள் சில நாட்களில் நிகழலாம் என்று ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் (IMO) தெரிவித்துள்ளது. வெள்ளியன்று, தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் சுமார் 4,000 சிறிய/நடுத்தர பூகம்பங்களால் தாக்கப்பட்டது. அப்படி ஏற்பட்டதிலேயே மிகப்பெரும் நிலநடுக்கம் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள கிரின்டாவிக் கிராமத்திற்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகப்படியாக நேற்று, 14 மணிநேரத்திற்குள் அந்த பகுதியில் 800 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் எரிமலை வெடிப்பு ஏற்படக்கூடும் என்பதால், ஐஸ்லாந்தின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளூ லகூன் புவிவெப்ப ஸ்பா மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.