நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 140 பேர் படுகாயம்
வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 128 நபர்கள் உயிரிழந்தனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலநடுக்கத்தில், நேபாளத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சிலரின் இருப்பிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் வடமாநிலங்கள் பலவற்றிலும், குறிப்பாக புது டெல்லியிலும் உணரப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி இரங்கல்
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலை தெரிவித்த, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இன்று அதிகாலை மருத்துவ குழுவுடன் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட விரைந்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு, இந்திய பிரதமர் மோடியும் தனது இரங்கல்களை பதிவு செய்துள்ளார். "நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தியா, நேபாள மக்களுடன் நிற்கிறது. மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இந்தியா உள்ளது. இறந்த குடும்பங்களுக்கு எங்கள் வேண்டுதல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதிக்கிறோம்," என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட விரைந்த நேபாள பிரதமர்
Nepal Prime Minister Pushpa Kamal Dahal 'Prachanda' leaves for earthquake-affected areas of the country. (Pics Source: Nepal officials) pic.twitter.com/fgxK2Ttep6— ANI (@ANI) November 4, 2023
இந்திய பிரதமர் மோடி இரங்கல்
Deeply saddened by loss of lives and damage due to the earthquake in Nepal. India stands in solidarity with the people of Nepal and is ready to extend all possible assistance. Our thoughts are with the bereaved families and we wish the injured a quick recovery. @cmprachanda— Narendra Modi (@narendramodi) November 4, 2023