Page Loader
இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை
மாதிரி புகைப்படம்

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

எழுதியவர் Srinath r
Nov 08, 2023
01:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளது நிலநடுக்கம், இந்தோனேசியாவின் அம்போனுக்கு தென்கிழக்கே 370 கிமீ (229.9 மைல்) தொலைவிலும், கடலுக்கு அடியில் 146 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் அமைப்பு (BMKG), தனிம்பார் தீவுகளில் உள்ள சாம்லாகி நகரில் நடுக்கம் மிதமாக உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக EMSC, இந்த நிலநடுக்கத்தை 6.8 ஆக மதிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்தோனேசிய கடல் பகுதியில் நிலநடுக்கம்