Page Loader
கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து
மாண்ட்ரீல் டால்முட் தோரா தொடக்கப்பள்ளியில், குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு வழங்கும் போலீசார். படம்-ஏஎஃப்பி

கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து

எழுதியவர் Srinath r
Nov 10, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிகளின் முன் கதவுகளிலும், துப்பாக்கியால் சுடப்பட்ட தடங்கள் இருந்ததாக, பள்ளி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாண்ட்ரீல் நகரத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "உணர்ச்சிகள் அதிகமாகவும், மக்கள் பயத்திலும் இருப்பது எனக்கு தெரிகிறது" "ஆனால் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, கனடியர்களின் பண்பில்லை. உலகில் எங்காவது மத்திய கிழக்கில் அமைதி திரும்ப புரிதல் ஏற்படுமானால், அது கனடாவாக தான் இருக்க முடியும்" என அவர் பேசினார்

2nd card

கனடாவில் அதிகரிக்கும் சகிப்பற்ற தன்மை

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதல், கனடாவில் சகிப்பற்றத்தன்மை அதிகரித்துள்ளது. மாண்ட்ரீல் நகரத்தில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் யூதர்களின் ஜெப ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் ஆதரவு பேரணிகளில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பானது. இது சிலர் காயமடைவதிலும், காவல்துறையினர் சிலரை கைது செய்வதிலும் போய் முடிந்தது. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், கான்கார்டியா பகுதியில் உள்ள பள்ளிகளில் சுவஸ்திக முத்திரை வரையப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, மாண்ட்ரீல் பகுதியில் இருக்கும் வழிபாட்டுத்தளங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கனடாவில் வெறுப்புக்கு இடம் இல்லை என ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்