பாகிஸ்தானின் மியான்வாலி விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது; 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை இரவு, வடக்கு பாகிஸ்தானின் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம், தற்கொலை படையினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூன்று தாக்குதல்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இன்னும் மூன்று தாக்குதல்காரர்கள் தளத்திற்குள் செயலில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபான்ளுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியவர்கள் அகற்றப்பட்டு, அகற்றும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படையினர், ஏணியைப் பயன்படுத்தி விமான தளத்தின் வேலியிடப்பட்ட சுவர்களுக்குள் நுழைந்ததாகவும், அவர்கள் இருப்பில் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறப்டுகிறது.
இந்த தாக்குதலில், விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
card 2
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தாக்குதல்
நேற்று பகலில், இதே வடமேற்கு பாகிஸ்தானில், உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரத்தில், காவல்துறையினரை குறிவைத்து மற்றுமொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 21 பேர் வரை படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
அதேபோல, கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், மசூதிக்கு அருகில் குண்டு வெடித்தது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் மசூதிக்கு அருகில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருந்தனர்.