
நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில், நேபாளத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சிலரின் இருப்பிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.
அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் வடமாநிலங்கள் பலவற்றிலும், குறிப்பாக புது டெல்லியிலும் உணரப்பட்டது.
நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், நாட்டின் முப்படைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். மேலும், அவர் மீட்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
card 2
நேபாளத்தில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
பெரி மருத்துவமனை, கோஹல்பூர் மருத்துவக் கல்லூரி, நேபாள்கஞ்ச் ராணுவ மருத்துவமனை மற்றும் நேபாளத்தில் உள்ள போலீஸ் மருத்துவமனை ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து காயமடைந்தவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்வதற்காக, வழக்கமான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், நேபால்கஞ்ச் விமான நிலையம் மற்றும் ராணுவ முகாம்களில் ஆம்புலன்ஸ்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.