உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

குடியேறுபவர்களை குறைக்கவும், மாணவர் விசா விதிகளை கடுமையாக்கவும் ஆஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் நோக்கோடு, சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.

11 Dec 2023

இந்தியா

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

11 Dec 2023

கனடா

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்

கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா

பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.

காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் வரைவு தீர்மானம் மீது, செவ்வாய்கிழமை வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக அதன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

"ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்நிய முதலீட்டுக் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தும் ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி மற்றும் குடியிருப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் மீதான கட்டணத்தை மூன்று மடங்கு வரை அதிரகரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு.

10 Dec 2023

இஸ்ரேல்

ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக காசா வாழ் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்குதல்களால் ஏற்படும் அழிவை விட, பசி மற்றும் நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது அப்பகுதி.

காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா

காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது அமெரிக்கா.

கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள்

குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியர்கள் நடமாடி கொண்டாடினர்.

08 Dec 2023

ஈராக்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி, ஏவுகணைகள் ஏவப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

08 Dec 2023

ஐநா சபை

காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99?

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல தசாப்தங்களில் பயன்படுத்தப்படாத ஐநாவின் பிரிவு 99ஐ அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பயன்படுத்தினார்.

பிரதமர் மோடியின் ஆளுமையை பாராட்டிய ரஷ்யா பிரதமர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் "கடினமான" முடிவெடுப்பை பாராட்டிய வீடியோ ஒன்று சமூக ஊடக பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்

தாலிபான்களிடம் இருந்து மக்கள் விலகி இருப்பதற்கு முக்கிய காரணம், பெண்கல்வி மீதான தொடர்ச்சியான தடையென, தாலிபானால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

07 Dec 2023

சீனா

சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா?

இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சின் கேங், தற்கொலை அல்லது சித்திரவதையின் காரணமாக மரணமடைந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

07 Dec 2023

ஹமாஸ்

இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர்

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனியே, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தடுக்க, "வீரமான" பாகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளதாக, அந்நாட்டின் ஜியோ செய்திகள் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல்

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிர்படுத்தி உள்ள நிலையில், அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று, புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்

காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து தற்போது நடந்து வரும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் எனவும்,

பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஜியோ செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம்

காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்தி, ஹமாஸ் போராளிகளை வெளியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட, அங்கு பெரிய அளவிலான மோட்டார்களை இஸ்ரேல் பொருத்தியுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகளின் தகவலை மேற்கோள்காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.

04 Dec 2023

இஸ்ரேல்

போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி

தெற்கு காசாவில் நடக்கும் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து, எரிமலை சாம்பலை 3,000 மீட்டர் (9,843 அடி) காற்றில் கக்கியது என நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம்

பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவான மிண்டனாவ் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்த நிலையில், 9 பேரை காணவில்லை.

பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் ஈபில் கோபுரம் அருகே நடந்த கத்தி மற்றும் சுத்தியல் தாக்குதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்

ஞாயிற்றுக்கிழமை காலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்று கான் யூனீஸ் மக்கள் கூறுகின்றனர்.

03 Dec 2023

இந்தியா

COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு

28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP28) காலநிலை உச்சிமாநாட்டில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியாவும் சீனாவும் மறுத்துவிட்டன.

சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்

நேற்று (டிசம்பர் 2) இரவு 10.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

02 Dec 2023

இத்தாலி

பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்

இத்தாலியின் போலோக்னாவில் உள்ள கரிசெண்டா கோபுரம், பைசா சாய்ந்த கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

02 Dec 2023

இஸ்ரேல்

'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்

பிணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் குழு மீறியதால் தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.

போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்

இஸ்ரேல் ஹமாசிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?

வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது, அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 

20 வயது இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை அமெரிக்காவில் உள்ள மிசோரி போலீசார் கைது செய்துள்ளனர்.

01 Dec 2023

துபாய்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்

துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

01 Dec 2023

ரஷ்யா

'8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல்

நாட்டில் உள்ள பெண்கள் எட்டு குழந்தைகளைப் பெற்று, குடும்பங்களை பெரிய குடுமபங்களாக மாற்றுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாசிடையே ஒப்பந்தமான ஏழு நாள் போர் நிறுத்தம், மேலும் நீட்டிக்கப்படாததால் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.