காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99?
செய்தி முன்னோட்டம்
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல தசாப்தங்களில் பயன்படுத்தப்படாத ஐநாவின் பிரிவு 99ஐ அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பயன்படுத்தினார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
இரண்டு மாதங்களை கடந்து நடந்து வரும் இப்போரில், 16,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் கடைசியாக பயன்படுத்தப்பட்ட ஐநா சாசனத்தின் பிரிவு 99 ஐ, குட்டெரெஸ் பயன்படுத்தியுள்ளார்.
பிரிவு 99- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுச் செயலாளர் நம்பும் விஷயங்களைச், விவகாரங்களின் சபைக்கு தெரிவிக்கலாம் என்று கூறுகிறது.
2nd card
பிரிவு 99 என்றால் என்ன, அதை ஏன் குட்டெர்ஸ் பயன்படுத்துகிறார்?
பிரிவு 99, பொதுச்செயலாளர் - ஐநாவின் உயர்மட்ட அதிகாரி - "அவரது கருத்துப்படி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு விஷயத்தையும்" பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்ற ஐநா அரசியலமைப்பு கூறுகிறது.
ஐநாவின் உண்மையான அதிகாரம் அதன் 193 நாடுகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உள்ள 15 நாடுகளின் கையில் இருப்பதால், இந்த பிரிவு ஐநா பொதுச் செயலாளர் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
பிரிவு 99 அரிதாக பயன்படுத்தப்படுகிறது. கடைசியாக, 1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தானுக்கு போரின் மூலமாக வங்கதேசம் உருவானபோது இது பயன்படுத்தப்பட்டது.
காசாவின் நிலைமை "முழுமையான சரிவின் அபாயத்தில்" இருப்பதைக் கண்டதால், குட்டெரெஸ் சட்டப்பிரிவு 99 ஐ தற்போது பயன்படுத்தியுள்ளார்.
3rd card
அமெரிக்காவிற்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது எந்த வகையில் பலனளிக்கும்?
குட்டெரெஸ் முடிவுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் உடனடியாக செயலாற்றினர்.
பாதுகாப்பு கவுன்சிலின் அரபு பிரதிநிதியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் குறுகிய தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு புதன்கிழமை அனுப்பியது.
மேலும் அவர்கள் இன்று காலை ஐநா பாதுகாப்பு சபையில், இது குறித்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இஸ்ரேலின் நெருங்கிய நண்பரும், வீட்டோ அதிகாரம்(எந்த ஒரு தீர்மானத்தையும் தடுக்கும் சக்தி) உள்ள அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை.
அமெரிக்க துணை தூதர் ராபர்ட் வுட், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் பலனளிக்காது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
4th card
இது பலனளிக்காத பட்சத்தில், இதை குட்டெரெஸ் ஏன் பயன்படுத்தினார்?
காசாவில் மனிதாபிமான அமைப்பும், மனிதாபிமான நடவடிக்கைகளும் சீர்குலைந்துள்ளதாக குட்டெரெஸ் நம்புவதால், இதை பயன்படுத்தி உள்ளார்.
"இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்கு மத்தியில், தங்குமிடம் அல்லது உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியங்கள் இல்லாமல்,"
"அவநம்பிக்கையான நிலைமைகள் காரணமாக பொது ஒழுங்கு விரைவில் முற்றிலுமாக சீர்குலைந்து, வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவியை கூட சாத்தியமற்றதாக ஆக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சுகாதாரமற்ற சூழ்நிலையால் அங்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும், குட்டெரெஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.