
பிரதமர் மோடியின் ஆளுமையை பாராட்டிய ரஷ்யா பிரதமர் புடின்
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் "கடினமான" முடிவெடுப்பை பாராட்டிய வீடியோ ஒன்று சமூக ஊடக பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தியில் குரல் கொடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் உறவுகள் குறித்து ரஷ்ய தலைவர் நீண்ட நேரம் பேசுவதைக் காட்டுகிறது.
"ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் எல்லா திசைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, இதற்கு முக்கிய உத்தரவாதம் பிரதமர் மோடியின் கொள்கை" என்று ரஷ்ய தலைவர் கூறினார்.
இந்த வீடியோவில், பிரதமர் மோடியின் கொள்கைகள் மீது புடின் தனது அபிமானத்தைப் பகிர்ந்து கொள்வதாக காட்டப்பட்டுள்ளது.
card 2
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புடினின் குரல்
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரலில், தனது ரஷ்யா மொழி வார்த்தைகளை மொழிபெயர்த்து, பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு புடின் தனது அபிமானத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த பதிவில்,"இந்த வீடியோவில் உள்ள ஜனாதிபதி புட்டினின் குரல் AI மூலம் உருவாக்கப்பட்டது" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
"உண்மையைச் சொல்வதானால், இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது கடுமையான நிலைப்பாடு சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.
45 வினாடிகள் கொண்ட கிளிப், ஆயிரக்கணக்கான வியூஸ்களை குவித்துள்ளது.
கடந்த மாதம், மெய்நிகர் G20 உச்சிமாநாட்டில் தனது உரையில், செப்டம்பர் 9-10 வரை, G20 தலைவர் பதவியில் இருந்தபோது, இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதற்காக புடின் நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புடினின் குரல்
🇷🇺 राष्ट्रपति व्लादिमीर पुतिन ने की 🇮🇳 प्रधानमंत्री नरेंद्र मोदी की तारीफ, कहा- उनकी नीति भारत और रूस के प्रगाढ़ संबंधों की गारंटी
— RT Hindi (@RT_hindi_) December 7, 2023
राष्ट्रपति पुतिन ने कहा- ''रूस और भारत के संबंध लगातार सभी दिशाओं में विकसित हो रहे हैं और इसकी मुख्य गारंटी प्रधानमंत्री मोदी की नीति है। मैं… pic.twitter.com/b7lwMuMWZD
ட்விட்டர் அஞ்சல்
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புடினின் குரல்
#Russia #President #VladimirPutin praises #PMModi
— OMPRAKASH (@omprakash678) December 8, 2023
"Nobody can force or intimidate #PM #Modi to take any step against the interest of #India or its people"
"PM Modi's policy is the main guarantor of growing #India-Russia relations"#IndiaRussiaTies #மோடி #IndiaRussiaRelations pic.twitter.com/YB328Wauck