பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் ஈபில் கோபுரம் அருகே நடந்த கத்தி மற்றும் சுத்தியல் தாக்குதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9 மணி மணிக்கு முன்னதாக நடந்த தாக்குதலில், பிரான்ஸ் காவல்துறைக்கு பரிட்சயமான 26 வயது பிரான்ஸ் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அர்மண்ட் ஆர் என கூறும் அந்நாட்டு ஊடகங்கள், அவர் மீது திட்டமிட்ட கொலை மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய படுகொலை முயற்சி, ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றன.
தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது?
குவே டி கிரெனெல்லே பகுதியில், கொலை செய்யப்பட்டவர் தன் மனைவியுடன் இருக்கும் போது குத்தி கொலை செய்யப்பட்டார் எனவும், வாடகை கார் ஓட்டுநர் குறுக்கிட்டதனால் அவர் மனைவி காப்பாற்றப்பட்டதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார். பிறகு, செய்ன் ஆற்றின் குறுக்கே பாலத்தின் வழியாக சென்ற அர்மண்ட், மேலும் இதுவரை- ஒருவரின் கண்ணில் சுத்தியலால் தாக்கியதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதில் 60 வயதான பிரான்ஸ் நாட்டவரும், இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுல பயணியும் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட அர்மண்ட் குறித்து இதுவரை தெரிந்தவை?
குற்றம் சாட்டப்பட்டவர் "அல்லாஹ் அக்பர்" என முழங்கியதாகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்காக காவல்துறையிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், அமைச்சர் டார்மானின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், டார்மானின் கூறினார். கடந்த 2016 ஆம் ஆண்டு, ஒரு தாக்குதலை திட்டமிட்டதற்காக இவர் நான்காண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து அவர், பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து வருகிறார். நேற்று, அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதாக அவர் கருதியது குறித்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்ததாக, ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.