NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா
    இதுவரை 17,487 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Dec 09, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது அமெரிக்கா.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் வான்வழி தாக்குதலை நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றது.

    அதனை தொடர்ந்து, பலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது.

    இரண்டு மாதமாக தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் இதுவரை 17,487 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    ஐநா சபையும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறது.

    தக்ஜயூ;

    'மொத்த பாலஸ்தீன மக்களையும் தண்டிக்க முடியாது': ஐநா

    இந்நிலையில், நேற்று அரிதாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா சாசனத்தின் 99வது சட்டப்பிரிவை உபயோகித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டினார்.

    அந்த கூட்டத்தின் போது பேசிய அவர், ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு மொத்த பாலஸ்தீன மக்களையும் தண்டிக்க முடியாது என்று கூறினார்.

    மேலும், இஸ்ரேலிய பிணையகைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ஆனால், இந்த கூட்டத்தின் போது, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா, காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை முறியடித்தது.

    காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது என்பதும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஐநா சபை
    காசா
    இஸ்ரேல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை விசா
    வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார் முதலீட்டாளர்
    'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு  இந்தியா
    400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது? இந்தியா

    ஐநா சபை

    எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது உலகம்
    நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை! కాలుష్యం
    அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா  உலகம்
    ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி இந்தியா

    காசா

     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி இஸ்ரேல்
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு இஸ்ரேல்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்

    இஸ்ரேல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் காசா
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025