பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம்
பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவான மிண்டனாவ் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்த நிலையில், 9 பேரை காணவில்லை. நேற்று முதலில் ரிட்டர் அளவில் 7.6 ஆக பதிவான நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து, 6.0 ரிட்டர் அளவிற்கு மேல் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இரவு 10:37 மணிக்கு ஏற்பட்ட ஆரம்ப நிலநடுக்கம், பசிபிக் பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது. மிண்டனாவோவின் கிழக்கு கடற்கரையில் வசிப்பவர்கள், கட்டிடங்களை விட்டு வெளியேறி, உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் 529 குடும்பங்கள் பாதிப்பு
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, 10 அடி வரை சுனாமி அலைகள் எழலாம் என எச்சரித்திருந்த நிலையில், பின்னர் அந்த எச்சரிக்கையை விளக்கிக் கொண்டது. பிலிப்பைன்ஸின் வடகிழக்கில், உள்ள ஜப்பானுக்கு வெளியில் உள்ள தீவுகளில், 1.3 அடி வரை சுனாமி அலைகள் எழுந்தது. டாவோ டெல் நோர்டே மாகாணத்தில் டாகும் நகரத்தில், 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில், கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தார். அவரது மகள் மற்றும் கணவர் காயமடைந்தனர். நேற்றைய நிலநடுக்கத்தில், 529 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செயலாளர் கில்பர்ட் தியோடோரோ தெரிவித்துள்ளார். பசுவிக் கடலோரத்தில் 'முக்கிய நில அதிர்வு செயல்பாடு' ஏற்படும் பகுதிகளில் அமைந்துள்ள, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது.