இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து, எரிமலை சாம்பலை 3,000 மீட்டர் (9,843 அடி) காற்றில் கக்கியது என நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. "2,981 மீட்டர் எரிமலை உள்ளூர் நேரப்படி மதியம் 2.54 மணிக்கு வெடித்து, எரிமலை சாம்பலை அண்டை மாவட்டங்களுக்கு அதிக தீவிரத்துடன் வீசுகிறது" என படன் நேஷனல் பெனாங்குளங்கன் பென்கானா(BNPB) அதிகாரிகள் தெரிவித்தனர். சாலைகள் மற்றும் வீடுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ள புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகிறது. எரிமலையை சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அனைத்து செயல்பாடுகளையும் தடை செய்துள்ள அதிகாரிகள், இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையை பிரகடன படுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டு, அவர்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.