கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள்
செய்தி முன்னோட்டம்
குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியர்கள் நடமாடி கொண்டாடினர்.
அமெரிக்காவின் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், நியூ ஜெர்சி உட்பட மூன்று மாநில பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்று டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் கர்பா நடனமாட, பார்வையாளர்கள் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA), NY-NJ-CT-NE மற்றும் பல சமூக அமைப்புகள் மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச போக்குவரத்து, சிற்றுண்டி மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
2nd card
கர்பா என்றால் என்ன?
நவராத்திரியின் 9 நாட்களிலும் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் ஆடும் கர்பா நடனம் சமீபத்தில், யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியல்' பட்டியலில் இடம் பிடித்தது.
கர்பாவை பட்டியலில் சேர்க்க இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில்,
போட்ஸ்வானாவின் கசானே பகுதியில், மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியம் விழாவின் 18வது அமர்வின் போது, யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
இந்தியா சார்பில் இப்பட்டியலில், 15 ஆவதாக கர்பா இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் குஜராத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
embed
கர்பாவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை, வண்ணமயமாக கொண்டாடிய இந்தியர்கள்
Embracing the vibrant spirit of Garba in @TimesSquareNYC 🇮🇳🇺🇸Community members @FIA united in a joyous Garba celebration, honoring @UNESCO's recognition of 'Garba of Gujarat' as an Intangible Cultural Heritage of Humanity. Celebrating the unifying spirit of #Garba at the... pic.twitter.com/WAVIizyklc— India in New York (@IndiainNewYork) December 8, 2023