பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்
இத்தாலியின் போலோக்னாவில் உள்ள கரிசெண்டா கோபுரம், பைசா சாய்ந்த கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. நகரின் உயரமான கோபுரமாக உள்ள இது கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்தாலும், நிலையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதிக சாய்வு காரணமாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 அடி உயர கோபுரம் ஆரம்பத்தில் நேராக கட்டப்பட்டாலும், 14 ஆம் நூற்றாண்டில் இருந்து 4 டிகிரி கோணத்தில் சாய்ந்தது. அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் கட்டிடத்தின் மேற்பகுதியை அகற்ற முயன்றனர். ஆனால், பைசாவின் சின்னமான கோபுரம் தற்போது 5 டிகிரி சாய்ந்துள்ளது.
கட்டிடத்தை நிலைத்து நிற்க செய்த முயற்சி வீண்
பல ஆண்டுகளாக, கோபுரத்தின் நிலையை பராமரிக்க இத்தாலி பல ஆண்டுகளாக விரிவான பணிகளைச் செய்துள்ளது. ஆனால் தற்போது கோபுரம் அளவுக்கு அதிகமாக சாய்ந்து கிடப்பதால், சிவில் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நகராட்சி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, கோபுரம் திடீரென எதிர்பாராத விதமாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இடிபாடுகள் ஏற்பட்டால் சுற்றியுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கவும், குப்பைகளைக் கட்டுப்படுத்தவும் கோபுரத்தைச் சுற்றி ஒரு உலோகக் கட்டை அமைக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை கண்காணித்து வரும் அறிவியல் குழு, கோபுரம் இடிந்து விழும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.