இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று பிற்பகல் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இலங்கையின் கொழும்புக்கு தென் கிழக்கே 1326 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இலங்கைக்கு தென் கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து ஏதும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.