அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்
செய்தி முன்னோட்டம்
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.
கடந்த சில நாட்களாக அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றி போர் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று இரவு "ஹமாஸுக்கு எதிரான துல்லிய நடவடிக்கைகளை" இஸ்ரேல் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றி வளைத்து உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த காதர் ஜானூன் என்பவர், மருத்துவமனைக்குள் 6 டேங்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் முக்கிய அவசர சிகிச்சை பிரிவு வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும்,
அவர்கள் அரபியில் "நகர வேண்டாம்" என கூச்சலிட்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
2nd card
சுற்றி வளைக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையில் எத்தனை பேர் உள்ளனர்?
சில ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்கள் அல்-ஷிஃபாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அல்-ஷிஃபாவில் 700 நோயாளிகள், 400 மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 3,000 பொதுமக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.
ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம், குறைந்தது 2,300 பேர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்திருந்தது. அதில், 650 நோயாளிகள், 200-500 ஊழியர்கள் மற்றும் சுமார் 1,500 பொதுமக்கள் அடங்கும்.
3rd card
மருத்துவமனைக்குள் துப்பாக்கி சண்டை நடைபெறுவதை பார்க்க விரும்பவில்லை- அமெரிக்கா
அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
"மருத்துவமனை வான் வழியாக தாக்கப்படுவதை ஆதரிக்கவில்லை"
"அப்பாவி மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் துப்பாக்கி சண்டையில் சிக்கிக் சிக்கிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை" என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மருத்துவமனை மற்றும் நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்களை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4rd card
அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ஏன் கைப்பற்றியது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது முதலே, ஹமாஸ் பணைய கைதிகளை மனிதக் கேடயங்களாக பண்படுத்தி வருவதாகவும், காசாவில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் தங்களின் கட்டுப்பாட்டு மையங்களை வைத்துள்ளதாகவும் கூறிவருகிறது.
மேலும், அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழே ஹமாஸ் மற்றும் மற்றொரு பாலஸ்தீன ஆயுத குழுவான இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் இந்த கூற்றை அமெரிக்காவும் தற்போது ஆதரிக்கிறது. ஹமாசின் கட்டுப்பாட்டு மையம், அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ் உள்ளதை தங்கள் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால் ஹமாஸ் அமைப்பும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அது போன்ற ஒன்றை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.