Page Loader
இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான் 
தூக்கிலிடப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான் 

எழுதியவர் Sindhuja SM
Dec 16, 2023
02:58 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஏஜென்ட் ஒருவர் இன்று ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் தூக்கிலிடப்பட்டார். "தூக்கிலிடப்பட்ட நபர் ஈரானின் இரகசிய ஆவணங்களை சேகரித்து, அவற்றை இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை உள்ளிட்ட வெளிநாட்டு சேவைகளுக்கு அனுப்பினார்" என்று ஈரான் அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. ஆனால், தூக்கிலிடப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. "இஸ்லாமிய குடியரசை எதிர்க்கும் குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு உதவும் நோக்கத்தோடு மொசாட் அதிகாரி ஒருவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரகசிய தகவல்களை ஒப்படைத்ததாக" ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஆவண பரிமாற்றம் எங்கு வைத்து நடந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

டல்ஜிக்க்

நேற்று ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 

தூக்கிலிடப்பட்ட நபர் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதாக ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. சிஸ்டன்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை நேற்று பலுச் பயங்கரவாதிகள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் 11 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அந்த மோதலில் ஜெய்ஷ் அல்-அத்ல் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடந்து ஒரு நாள் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில், அதே மாகாணத்தில் உள்ள சஹேதான் சிறையில் இன்று ஒரு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, நேற்று தாக்குதல் நடந்த ராஸ்க் நகரில் இன்று உயிரிழந்தவர்களுக்கு அரசாங்க மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.