தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. தாவூத் இப்ராஹிமை, விஷம் வைத்து கொல்லப்பட சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதனாலேயே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாவுத் இப்ராஹிம், பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த மருத்துவமனையில், அந்த தளத்தில் உள்ள ஒரே நோயாளி அவர் மட்டும் தான் எனவும் செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில், தாவூதின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், "இது வெறும் வதந்தி. பாய் பூரண நலத்துடன் இருக்கிறார்" என கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்படும் தாவுத்
உளவுத்துறை வட்டாரங்களும், தாவுத் விஷம் வைத்து கொல்ல முயற்சிகள் நடந்திருக்கும் என்பதை மாறுகிறது. காரணம், தாவூதை சுற்றி கடுமையான பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது எனவும். அதில் முதல் கட்டமாக தாவூதின் விசுவாசிகள் இருப்பார்கள் எனவும், அடுத்தகட்ட பாதுகாப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருக்கிறது எனவும் கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிரான ஜிகாத் தீவிரவாதத்தை, தாவூதின் ஆதரவில் தான் பாகிஸ்தான் செயல்படுத்துகிறது என்றும், அதனால், அவரது நலனில் பாகிஸ்தான் மிகுந்த பாதுகாப்போடு இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறது. எனினும் தாவுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கூடும் என்பதை மட்டும் அவர்கள் மறுக்கவில்லை. குறிப்பாக கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில், இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் பலரும் மர்மமான முறையில் கொல்லப்படுவதை அடுத்து, தாவுத் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் எழாமலில்லை.