Page Loader
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
09:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் கடுமையான சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்று கூறிய இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், ஆனால் நிலநடுக்கம் நிலத்தை மையமாகக் கொண்டிருப்பதால், தொடர் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

வஜ்ஹர் 

தொடர்ந்து இந்தோனேசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள் 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. வெறும் 62,250 மக்கள்தொகையை கொண்ட, அபேபுரா இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். கடந்த பிப்ரவரியில், இதே போல மற்றொரு ஆழமற்ற நிலநடுக்கம் அந்த மாகாணத்தில் ஏற்பட்டது. அப்போது ஒரு மிதக்கும் உணவகம் கடலில் இடிந்து விழுந்ததால் தப்பிக்க முடியாமல் நான்கு பேர் கொல்லப்பட்டனர். கடந்த நவம்பர் 21ஆம் தேதி, ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர்.