செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
செங்கடலில் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, ஹூதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
வர்த்தக கப்பல்களுக்கு எதிராக எவப்படும் ஏவுகணைகளை, கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்துவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதியில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
"நவம்பர் 19ஆம் தேதியிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களின் 19வது சர்வதேச கப்பல் மீதான தாக்குதல்" என அமெரிக்க மத்திய கட்டளை(சென்ட்காம்) தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாசுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறி வைத்து, ஹூதிக்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2nd card
உலகின் 12% வர்த்தகம் நடைபெறும் செங்கடலை குறி வைக்கும் ஹூதிகள்
சிங்கப்பூரின் கொடி கட்டிய, டென்மார்க்கிற்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் கொள்கலன் கப்பலான மார்ஸ்க் ஹாங்சோ தாக்கப்பட்டதாக வந்த அழைப்பை தொடர்ந்து, யுஎஸ்எஸ் கிரேவ்லி மற்றும் யுஎஸ்எஸ் லாபூன் ஆகிய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
ஏமனை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதாக கூறி, உலக அளவில் 12% வர்த்தகம் நடைபெறும் செங்கடல் கடல் வழித்தடத்தில் கப்பல்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
முதலில், இஸ்ரேலுக்கு செல்லும், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மட்டும் தாக்கப்படும் என அறிவித்த ஹூதிகள், பின்னர் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் தாக்கத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்க தனது நட்பு நாடுகளின் கூட்டணியில், பனிக்குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.