இந்திய அணி: செய்தி

25 May 2023

இந்தியா

உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!

கிரீஸின் கலிதியாவில் புதன்கிழமை (மே 24) நடைபெற்ற உலக கான்டினென்டல் டூர் சர்வதேச தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.

24 May 2023

ஐபிஎல்

'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்

ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை!

செவ்வாயன்று (மே 23) கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பெண்கள் ஸ்கீட் பிரிவில் முதல்முறையாக இந்தியா இரண்டு தனிநபர் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் ஹாக்கி தொடரின் மூன்றாவது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா 1-1 என சமன் செய்தது.

22 May 2023

இந்தியா

'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண போதைப்பொருள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

'18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி, தனது 18ஆம் எண் ஜெர்சியுடன் பிரபஞ்ச தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

18 May 2023

இந்தியா

ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!

அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் இந்திய மகளிர் கால்பந்து அணி ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்!

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

16 May 2023

இந்தியா

ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை!

கேரளாவின் ஆலப்புழாவில் நடைபெற்ற ஆசிய எக்யூப்டு பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஎல் டிம்ட் யூனிவர்சிட்டி மாணவி ஷேக் சதியா அல்மாசா, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

16 May 2023

இந்தியா

வரலாற்றில் முதல் முறை : உலக கோல்ப் தரவரிசையில் டாப் 50 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை!

இந்தியாவின் அதிதி அசோக் எல்பிஜிஏ நிறுவனர் கோப்பையில் டி5 இடத்தைப் பிடித்த பிறகு, உலக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய கோல்ப் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது!

திங்களன்று (மே 15) சீன தைபே மற்றும் மலேசியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதிர்மான் கோப்பை 2023 இல் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறியுள்ளது.

 எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஐரோப்பாவில் மே 26 ஆம் தேதி தொடங்கும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கில் பங்கேற்கும் 24 பேர் கொண்ட வலுவான இந்திய அணியை இந்திய ஹாக்கி சம்மேளனம் திங்கட்கிழமை (மே 15) அறிவித்துள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்!

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்து வரும் ஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெள்ளிக்கிழமை (மே 12) வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா 251.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா!

வியாழன் (மே 11) அன்று தோஹாவில் உள்ள கட்டாரா ஓபரா ஹவுஸில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023 இல் பங்கேற்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டன.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

அஜர்பைஜானின் பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தடிகோல் சுப்பராஜு மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தங்கம் வென்றது.

11 May 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!

வியாழன் (மே 11) அன்று வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் அணி ஒருநாள் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்

புதன்கிழமை (மே 10) அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றுள்ளார்.

10 May 2023

இந்தியா

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கங்கள் உறுதி! புதிய வரலாறு படைத்த இந்தியா!

இந்தியாவின் குத்துச்சண்டை வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), முகமது ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் தத்தமது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்!

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி 2023 : 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஜூன் 2 ஆம் தேதி ஜப்பானின் ககாமிகஹாராவில் தொடங்கும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான 18 பேர் கொண்ட அணியை இந்தியா புதன்கிழமை (மே 10) அறிவித்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

மே 18 முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்கட்கிழமை (மே 8) அறிவித்தது.

உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஊன்றுகோல் உதவி இல்லாமல் நடக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

05 May 2023

இந்தியா

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா! 

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் எகிப்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023க்கான 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தார்.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள் மற்றும் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

02 May 2023

இந்தியா

ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசியக் கோப்பை இரண்டாவது நிலை உலகத் தரவரிசைப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் செவ்வாய்கிழமை (மே 2) நடந்த ரிகர்வ் மற்றும் கூட்டுப் பிரிவுகளில் நான்கு குழுப் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

செவ்வாய்கிழமை (மே 2) அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாறியது.

WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய போட்டியிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகல்

இரண்டு முறை காமன்வெல்த் பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நேவால், உடற்தகுதி பிரச்சனைகள் காரணமாக வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தேசிய பேட்மிண்டன் தேர்வு சோதனைகளில் பங்கேற்க மாட்டார்.

01 May 2023

டெல்லி

டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் திங்கட்கிழமை (மே 1) ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.

28 Apr 2023

இந்தியா

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

பிவி சிந்து துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 26) முன்னேறினார்.

26 Apr 2023

இந்தியா

புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் சிலர் பெண் மல்யுத்த வீரர்களை அச்சுறுத்துவதாகவும், தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) குற்றம் சாட்டினார்.

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை 2023 ஸ்டேஜ் 1இல் இந்திய அணி நான்கு பதக்கங்களுடன் முடித்துள்ளது.