ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
பிவி சிந்து துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 26) முன்னேறினார். 2022 இல் நடந்த முந்தைய சீசனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சீன தைபேயின் ஹ்சு வென் சியை 21-15, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தனது இடத்தை உறுதி செய்தார். அடுத்த சுற்றில் சீனாவின் ஹான் யூவை அவர் எதிர்கொள்ள உள்ளார். இதற்கிடையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் கபூர்-சிக்கி ரெட்டி ஜோடி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.