
டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு
செய்தி முன்னோட்டம்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் திங்கட்கிழமை (மே 1) ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.
பஜ்ரங் புனியா உள்ளிட்ட இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இதில் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீஸ், விரைவில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Brij Bhushan Sharan Singh will be called for enquiry
டெல்லி காவல்துறை விசாரணை முழு விபரம்
புகார் அளித்த மல்யுத்த வீரர்களிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்ற பிறகு, கேள்விகளின் பட்டியலை போலீசார் தயார் செய்வார்கள்.
அதற்கு பிரிஜ் பூஷன் சிங் பதிலளிக்க வேண்டும். இரண்டு புகார்களையும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர் மற்றும் விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை பதிவு செய்த மைனர் உட்பட பெண் மல்யுத்த வீரர்களுக்கு டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) முதல் பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.