Page Loader
'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்
விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கும் எனக் கூறிய எம்எஸ்கே பிரசாத்

'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்

எழுதியவர் Sekar Chinnappan
May 24, 2023
05:00 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரசாத் செப்டம்பர் 2016 முதல் மார்ச் 2020 வரை இந்திய அணிக்கான தேசிய தேர்வாளராக இருந்தார். இந்நிலையில் எம்.எஸ்.கே. பிரசாத், "ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா,யாஷ் தாக்கூர், வதேரா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். உலக கோப்பைக்கு பிறகு நடக்க உள்ள இருதரப்பு தொடரில் இவர்கள் இந்திய அணியின் ஜெர்சியில் விளையாடுவதை பார்க்கலாம்." என்று கூறினார். அவர்களை டீம் இந்தியாவில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என்று மேலும் கூறினார்.

msk prasad about odi world cup

உலக கோப்பைக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தல்

வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இந்திய அணி முன்னேற வேண்டும் என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார். இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அணி குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத், "இப்போது சொல்வது கொஞ்சம் கடினம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு அதிக அனுபவம் உள்ளது. ரோஹித் ஒயிட் பால் கிரிக்கெட்டின் கேப்டன். சூர்யகுமார் யாதவும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். நேரம் மிகவும் குறைவு. இளம் வீரர்கள் இன்னும் சீர்படுத்தப்படவில்லை." என்று கூறினார். இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் 11'ஐ சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும் என எம்எஸ்கே பிரசாத் மேலும் கூறினார்.